/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு
நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு
நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு
நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு
ADDED : ஜூன் 02, 2025 03:29 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலை காமராஜர் நகரில், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தை, வங்கி துணை மேலாண் இயக்குனர்கள் அஜய்கேசூத் மற்றும் ராவத் ஆகியோர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். இதைய-டுத்து அலுவலக வளாகத்தை, கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், நபார்டு வங்கியின் பணிகள் பற்றி விவரித்தார். இதில், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய, மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தரர்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது-மேலாளர் பிரசன்னா, இந்தியன் வங்கியின் கிராமிய சுய வேலை-வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.