ADDED : ஜூன் 02, 2025 03:30 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆந்திர மாநில எல்லையான காளிகோவில் போக்குவரத்து சோதனைச்சாவடி அருகே, மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை தனி தாசில்தார் அருண்குமார் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியில் சோதனை செய்த போது, 20,000 ரூபாய் மதிப்-புள்ள ஒரு கிரானைட் கல்லை கடத்தி செல்வது தெரிந்தது. லாரி-யுடன் கல்லை பறிமுதல் செய்த அதிகாரிகள், கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய்த்துறை அலு-வலர்கள், இட்டிக்கல் அகரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே வாகன சோதனை செய்த போது, 40,000 ரூபாய் மதிப்-புள்ள, 6 யூனிட் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.