/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு போலீசார் வலை திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு போலீசார் வலை
திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு போலீசார் வலை
திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு போலீசார் வலை
திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு போலீசார் வலை
ADDED : செப் 24, 2025 01:26 AM
கிருஷ்ணகிரி :போச்சம்பள்ளி அடுத்த புளியாண்டிப்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து.
இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த, 2018ல், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இவர் மீது, 4 திருட்டு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் தலைமறைவானார்.
இவ்வழக்கு நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1ல் நடக்கிறது. இதில், வைரமுத்துவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவர் வரும், 27க்குள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வைரமுத்துவை கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரும் தேடி வருகின்றனர்.