/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பாம்பாறு அணையில் உபரி நீர் திறப்பு பாம்பாறு அணையில் உபரி நீர் திறப்பு
பாம்பாறு அணையில் உபரி நீர் திறப்பு
பாம்பாறு அணையில் உபரி நீர் திறப்பு
பாம்பாறு அணையில் உபரி நீர் திறப்பு
ADDED : செப் 24, 2025 01:25 AM
ஊத்தங்கரை :கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை, 19.6 அடி கொள்ளளவு கொண்டது. திருப்பத்துார் மாவட்டத்தில் பெய்த கன மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையில் 18.60 அடி நீர் நிரம்பி உள்ளது.
தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு, 70 கன அடி நீர் வந்த வண்ணம் உள்ளதால், அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்து கொண்டிருக்கும், 70 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரையோர பகுதி மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.