/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கமலை கண்டித்து மாநில எல்லையில் ஆர்ப்பாட்டம் பிடிவாதம் பிடிக்காமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் கமலை கண்டித்து மாநில எல்லையில் ஆர்ப்பாட்டம் பிடிவாதம் பிடிக்காமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
கமலை கண்டித்து மாநில எல்லையில் ஆர்ப்பாட்டம் பிடிவாதம் பிடிக்காமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
கமலை கண்டித்து மாநில எல்லையில் ஆர்ப்பாட்டம் பிடிவாதம் பிடிக்காமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
கமலை கண்டித்து மாநில எல்லையில் ஆர்ப்பாட்டம் பிடிவாதம் பிடிக்காமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 01, 2025 02:18 AM
ஓசூர், ஜூன் 1
நடிகர் கமலை கண்டித்து, கர்நாடகா மாநில எல்லையில் நேற்று கன்னட அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, கமல் பிடிவாதம் பிடிக்காமல் மன்னிப்பு கேட்க, வலியுறுத்தப்பட்டது.
'தமிழில் இருந்து கன்னடம் உருவானது' என, நடிகர் கமல் தெரிவித்த கருத்துக்கு, கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை கண்டித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று மதியம், கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகே, பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர், மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில், கமலை கண்டித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, கன்னட மக்களுக்கு கமல் எதிரானவர் என்றும், தேசத்துரோகி எனவும் கூறி, அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவரது உருவபடத்தை கிழித்தெறிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தால், தேசிய நெடுஞ்சாலையில் மதியம், 12:30 முதல், 1:30 மணி வரை போக்குவரத்து பாதித்தது.
கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா, நிருபர்களிடம் கூறியதாவது:
கன்னடம், தமிழ், தெலுங்கு சமகால மொழிகளாகும். வியாசர் எழுதிய மகாபாரதத்திலும், கன்னட மொழி குறித்து வருவதை, கமல் அறிய வேண்டும். கர்நாடகாவிலும் கமலுக்கு ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் மனதை கமல் புண்படுத்தக்கூடாது. பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது பெற்ற கமல், நாட்டின் இறையான்மைக்கும், ஒற்றுமைக்கும் தான் காரணமாக இருக்க வேண்டும். கமல் பேசிய வார்த்தைகள், கர்நாடகாவிலுள்ள, 7 கோடி மக்கள் மனதை புண்படுத்தி உள்ளது. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லா விட்டால், பல
வழிகளில் போராட்டம்
தீவிரமடையும்.
நாட்டை விட்டு வெளியேற போவதாக, கமல் ஒருமுறை கூறிய போது, கர்நாடகா மாநிலத்திற்கு வாருங்கள் என, கன்னட மக்கள் அழைத்தனர். அவர் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தனர். கமல் மன்னிப்பு கேட்பதால் சின்னவர் ஆக மாட்டார். மன்னிப்பு கேட்க, கமல் பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
இவ்வாறு, அவர் கூறினார்.