/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தேன்கனிக்கோட்டையில் தேசியக்கொடி பேரணி தேன்கனிக்கோட்டையில் தேசியக்கொடி பேரணி
தேன்கனிக்கோட்டையில் தேசியக்கொடி பேரணி
தேன்கனிக்கோட்டையில் தேசியக்கொடி பேரணி
தேன்கனிக்கோட்டையில் தேசியக்கொடி பேரணி
ADDED : ஜூன் 02, 2025 03:28 AM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில், பா.ஜ., கட்சி சார்பில், 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்கு பாடுபட்ட முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேசியக்கொடி பேரணி நேற்று நடந்தது.
பா.ஜ., மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாபு, ஒருங்கிணைப்பாளர் புட்டராஜ் முன்னிலை வகித்தனர். கர்-நாடகா மாநிலம், கோலார் முன்னாள் எம்.பி., முனுசாமி, பேர-ணியை துவக்கி வைத்தார்.தேன்கனிக்கோட்டையிலுள்ள தாலுகா அலுவலகம் முன் துவங்-கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி., ரோடு, நேதாஜி ரோடு, கோட்டை வாசல் வழியாக சென்று, பஸ் ஸ்டாண்டில் வந்து நிறைவு பெற்றது. ஒரு கி.மீ., துாரத்திற்கு நீளமாக தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சென்றனர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் நரேந்-திரன், முன்னாள் எம்.பி., முனுசாமி, மாநில செயற்குழு உறுப்-பினர் முனிராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பேசினர். 3,500க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.