/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நீர்நிலை, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆர்ப்பாட்டம் நீர்நிலை, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆர்ப்பாட்டம்
நீர்நிலை, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆர்ப்பாட்டம்
நீர்நிலை, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆர்ப்பாட்டம்
நீர்நிலை, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2025 01:38 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி அடுத்த சிக்கபூவத்தி பஞ்.,க்கு உட்பட்ட உப்புக்குட்டை, மிட்டப்பள்ளி, சி.கெட்டூர், தண்டானுார், தொன்னைமாறன் கொட்டாய், பண்ணக்கொள்ளை, மத்தனேரி, தொட்டிப்பள்ளம், ஊதன்கொட்டாய் ஆகிய, 9 கிராமங்களின் ஊர்கவுண்டர்கள், கிருஷ்ணகிரி, பா.ம.க., மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம், முன்னாள் மாவட்ட செயலாளர் இளங்கோ உள்பட, 300க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சிக்கபூவத்தி கிராமத்தில் அமைந்துள்ள மண்டு மாரியம்மன் கோவிலில் மற்ற சமூகத்தினர் ஒன்று சேர்ந்து, வன்னியர்களை கோவில் விழாக்களில் சேர்க்காததை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து நாட்களிலும் கோவிலை திறக்க வலியுறுத்தியும், கோஷம் எழுப்பினர்.
மேலும், சிக்கபூவத்தி கிராமத்திலுள்ள பசவண்ணக்கோவில், கங்கா தேவர் தேவதாயம், பெத்த பூவத்தி தேடுகரம், பெருமாள் கோவில் ஆகியவற்றின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 100 ஏக்கர் அரசு புறம்போக்கு, நீர்நிலை, கோவில் மானிய நிலங்களை அபரிக்க திட்டமிடுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து சென்றனர்.