ADDED : செப் 24, 2025 01:46 AM
அரூர் :அரூர் அடுத்த மருதிப்பட்டியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. அரூர் பி.டி.ஓ., கலைச்செல்வி குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார். முகாமில், மருதிப்பட்டி பஞ்.,ஐ சேர்ந்த பெரும்பாலான பெண்கள் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பம் அளித்தனர்.
அதே போல், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்டவைகள் கோரி, பொதுமக்கள் விண்ணப்பம் அளித்தனர். இதில், அரூர் தாசில்தார் பெருமாள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* கடத்துார் ஒன்றியம் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் உள்ள சமுதாய கூடத்தில் மணியம்பாடி, ஓசஹள்ளி ஆகிய, 2 ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சுப்பிரமணி தலைமையில் நடந்தது. முகாமில், 894 மனுக்கள் பெறப்பட்டன.