/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தாழ்வாக செல்லும் மின் கம்பி விபத்து அச்சத்தில் கிராம மக்கள் தாழ்வாக செல்லும் மின் கம்பி விபத்து அச்சத்தில் கிராம மக்கள்
தாழ்வாக செல்லும் மின் கம்பி விபத்து அச்சத்தில் கிராம மக்கள்
தாழ்வாக செல்லும் மின் கம்பி விபத்து அச்சத்தில் கிராம மக்கள்
தாழ்வாக செல்லும் மின் கம்பி விபத்து அச்சத்தில் கிராம மக்கள்
ADDED : செப் 24, 2025 01:51 AM
பாப்பிரெட்டிப்பட்டி :தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தின் வழியாக உயர் மின்னழுத்த பாதை செல்கிறது. இதன் மின்கம்பிகள் சாலையின் மேல் பகுதியில், கைக்கு எட்டும் அளவில் கீழாக செல்கிறது.
இச்சாலை வழியாக திப்பிரெட்டிஹள்ளி, பத்திரெட்டிஹள்ளி, கொண்டகரஹள்ளி, மணலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசு பஸ் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி பஸ்கள் செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது பஸ்ஸின் மேல் பகுதி, உயர் மின்னழுத்த கம்பியில் உரசும் அபாயம் உள்ளது. செங்கல் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள், டிராக்டர்கள் மீது கூலித்தொழிலாளர்கள் அமர்ந்து செல்கின்றனர். அப்போது எளிதில் மின்கம்பி உரசி, அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது.
இதை சீரமைக்க அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.