ADDED : ஜூலை 18, 2024 04:21 AM
திருநகர், : திருப்பரங்குன்றம் பகுதியில் 100 நாட்கள் வேலை திட்டம் சம்பந்தமாக ஒன்றிய அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய குழுத் தலைவர் வேட்டையன், வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா, ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
100 நாட்கள் வேலை எத்தனை நாட்கள் கொடுக்கப்படுகிறது, சம்பளம், நிலுவைத்தொகை, பணிகள் விபரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.