/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உத்தப்புரம் கோயிலை திறக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் உத்தப்புரம் கோயிலை திறக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
உத்தப்புரம் கோயிலை திறக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
உத்தப்புரம் கோயிலை திறக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
உத்தப்புரம் கோயிலை திறக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜூன் 15, 2024 06:30 AM
மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உத்தப்புரத்திலுள்ள கோயிலை திறந்து வழிபட அனுமதி கோரிய வழக்கில் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உத்தப்புரம் சந்திரா தாக்கல் செய்த மனு: உத்தப்புரத்தில் முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் உள்ளது. பங்குனி, புரட்டாசியில் திருவிழா நடைபெறும். இங்கு 9 ஆண்டுகளாக பூஜை, வழிபாடு செய்ய வருவாய்த்துறையினர், போலீசார் அனுமதிக்கவில்லை.மக்கள் நேர்த்திக் கடனை செலுத்த முடியவில்லை. கோயிலுக்கு வெளியில் வழிபாடு செய்தால், பொங்கல் வைக்க முயற்சித்தால் போலீசார் அனுமதி மறுக்கின்றனர். மன உளைச்சல் ஏற்படுகிறது. கலெக்டர், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., பேரையூர் தாசில்தார், எழுமலை இன்ஸ்பெக்டருக்கு மனு அனுப்பினோம். கோயிலை திறந்து தினசரி பூஜை செய்ய, நேர்த்திக் கடனை நிறைவேற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அடுத்தவாரம் ஒத்திவைத்தார்.