/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எல்லா ஜீவனிடத்திலும் பகவான் இருக்கிறான்: திருச்சி கல்யாணராமன் பேச்சு எல்லா ஜீவனிடத்திலும் பகவான் இருக்கிறான்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
எல்லா ஜீவனிடத்திலும் பகவான் இருக்கிறான்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
எல்லா ஜீவனிடத்திலும் பகவான் இருக்கிறான்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
எல்லா ஜீவனிடத்திலும் பகவான் இருக்கிறான்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
ADDED : ஜூன் 15, 2024 06:30 AM
மதுரை : ''சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று இறைவன் திருவடியை அடைய வேண்டும். எல்லா ஜீவனிடத்திலும் பகவான் இருக்கிறான்'' என சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.
மதுரை தியாகராஜர் கல்லுாரி, அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு கல்லுாரி அரங்கில் நடந்து வருகிறது.
விபீஷணன் சரணாகதி என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: துாய்மையான எண்ணத்தோடு நாம் வாழ வேண்டும். எல்லோரிடத்திலும் அன்போடு நடக்க வேண்டும். பகவன் நாமாவை சொல்லச் சொல்ல நாம் அன்பை பெறுவோம். எல்லா ஜீவனிடத்திலும் பகவான் இருக்கிறான்.
கர்ம யோகம் ஞான யோகம் பக்தியோகம் செய்துவிட்டு சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று இறைவன் திருவடியை நாம் வணங்க வேண்டும். ஹரி ஓம் நாராயணாய நமக என்றான் பிரகலாதன். குற்றம் செய்யாதவன் யாரும் உலகில் இல்லை. அதை நாம் உணர வேண்டும். பிறருக்கு தீங்கு செய்து அதன் மூலம் நல்லது பெற வேண்டும் என நினைக்கக்கூடாது. பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைக்கும் போது அதற்குரிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் பகவான் நாமாவை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் எதை சாப்பிடுகிறோமோ அந்த குணம் நமக்கு வந்து விடும். வள்ளலார் ஜீவகாருண்யம் வேண்டும் என்கிறார். ஏகாதசி அன்று விரதமிருந்து ஒவ்வொருவரும் ஹரி நாமா சொல்ல வேண்டும். சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். சொற்பொழிவு நாளையுடன் நிறைவு பெறுகிறது.
ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.