/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிட்டி ஸ்போர்ட்ஸ் 16 வயது கிரிக்கெட் ‛சீரிஸ் போட்டி சிட்டி ஸ்போர்ட்ஸ் 16 வயது கிரிக்கெட் ‛சீரிஸ் போட்டி
சிட்டி ஸ்போர்ட்ஸ் 16 வயது கிரிக்கெட் ‛சீரிஸ் போட்டி
சிட்டி ஸ்போர்ட்ஸ் 16 வயது கிரிக்கெட் ‛சீரிஸ் போட்டி
சிட்டி ஸ்போர்ட்ஸ் 16 வயது கிரிக்கெட் ‛சீரிஸ் போட்டி
ADDED : ஜூன் 16, 2024 05:05 AM
மதுரை: மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க அனுமதியுடன் மதுரை சேது கிரிக்கெட் அகாடமி சார்பில் 16 வயதிற்குட்பட்டோருக்கான மதுரை சிட்டி சேலஞ்சர்ஸ் தொடர் மதுரை மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, சோலைமலை கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது.
முதல்நாள் போட்டி முடிவுகள்
இந்த தொடரில் மதுரையில் இருந்து இரு அணிகளும் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் தலா ஒரு அணியும் பங்கேற்கின்றன. 50 ஓவர் ஆட்டங்களாக ஒவ்வொரு அணியும் தலா மூன்று அணிகளுடன் மோதும்.
தேனி மேனகா மில்ஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. கிரிவர் சிவக்குமார் 85, அபிமான் சுந்தர் 65 ரன், கெவின் ரோகித் 2 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் ஆரஞ்ச் கிரிக்கெட் அணி 38.4 ஓவர்களில் 182 ரன் எடுத்தது. பிரணவ் அழகப்பன் 36, ப்ரஜன் தேவ் 35 ரன், அபிமான் சுந்தர் 2, ஆதித் சாம்ராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர். 77 ரன் வித்தியாசத்தில் தேனி அணி வெற்றி பெற்றது. 2வது போட்டியில் மதுரை சேது கிரிக்கெட் அணி 35.4 ஓவர்களில் 84 ரன்னில் சுருண்டது. சுதர்சன் 2, ஹரீஷ் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய மதுரை ஒலிம்பிக் கோல்டு அணி 20.4 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புவனேஸ்வரன் 3, ப்ரணவ் ராம் 2 விக்கெட் வீழ்த்தினர். இன்று போட்டிகள் நிறைவுபெறுகிறது. அணிகள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்திற்கு தேர்வு செய்யப்படும்.