/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீசார் ஹெல்மெட்சீட் பெல்ட் அணிவது கட்டாயம் * மீறினால் வாகனம் பறிமுதல் என எச்சரிக்கை போலீசார் ஹெல்மெட்சீட் பெல்ட் அணிவது கட்டாயம் * மீறினால் வாகனம் பறிமுதல் என எச்சரிக்கை
போலீசார் ஹெல்மெட்சீட் பெல்ட் அணிவது கட்டாயம் * மீறினால் வாகனம் பறிமுதல் என எச்சரிக்கை
போலீசார் ஹெல்மெட்சீட் பெல்ட் அணிவது கட்டாயம் * மீறினால் வாகனம் பறிமுதல் என எச்சரிக்கை
போலீசார் ஹெல்மெட்சீட் பெல்ட் அணிவது கட்டாயம் * மீறினால் வாகனம் பறிமுதல் என எச்சரிக்கை
ADDED : ஜூன் 16, 2024 01:24 AM
மதுரை:மதுரை நகர் போலீசார் வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ெஹல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும். தவறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வாகனம் ஓட்டும்போது ெஹல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலுக்காக போலீசார் அபராதம் விதிக்கின்றனர். அதேசமயம் மக்களுக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் சிலர், வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை.
மதுரை நகரில் சில நாட்களுக்கு முன் புல்லட்டில் இரு போலீசார் ெஹல்மெட் அணியாமல் சென்றனர். புல்லட் பதிவெண் போக்குவரத்து விதிப்படி இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக 'என்னங்க சார்... உங்க சட்டம்' என பாடலுடன் வீடியோ வைரலானதை தொடர்ந்து போக்குவரத்து துணைகமிஷனர் குமார் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், 'நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் மற்றும் ெஹல்மெட் அணிய வேண்டும். மீறும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்' என எச்சரித்துள்ளார்.
இது புதிது அல்ல
நகர் போலீசாருக்கு இந்த உத்தரவு புதிது அல்ல. கோர்ட் அல்லது உயர்அதிகாரிகள் உத்தரவிடும்போது மட்டும் இதுபோன்று உத்தரவிடுவது வழக்கம். சில நாட்களிலேயே அந்த உத்தரவு கண்டுகொள்ளப்படாமல் விடப்படும். தற்போதைய இந்த உத்தரவையாவது முறையாக அதிகாரிகள், போலீசார் பின்பற்றுகிறார்களா என உயர்அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.