/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு
கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு
கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு
கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு
ADDED : ஜூன் 14, 2024 05:08 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா வில் 73 ஊராட்சி மற்றும் பேரையூர், டி. கல்லுப்பட்டி, ஏழுமலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் வகையில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே மதுரை நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை பின்பற்றாததால் தற்போது பேரையூர் பகுதி நீர் நிலைகளில் கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கிறது. சீமை கருவேல மரங்களை அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.