ADDED : ஜூன் 13, 2024 06:21 AM
உசிலம்பட்டி: கள்ளர் சீரமைப்புத்துறையை கல்வித்துறையுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில், தமிழ்மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நிர்வாகிகள் ராஜபாண்டியன், வீரணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.