ADDED : ஜூன் 13, 2024 06:22 AM
மதுரை: சேடபட்டியில் உள்ள எ.கோட்டைபட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கிராம முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது. மண் பரிசோதனை, காரிப் பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் மணிமேகலை விளக்கினார்.
கிராம முன்னேற்றக்குழு பற்றி துணை வேளாண் அலுவலர் பாண்டியன், இயற்கை வேளாண்மை, களை கட்டுப்பாடு குறித்து அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் கணேசராஜா பேசினர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்யா செய்திருந்தார்.