/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை- --- பெங்களூரு வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடி வரும் 20ல் துவக்குகிறார் மதுரை- --- பெங்களூரு வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடி வரும் 20ல் துவக்குகிறார்
மதுரை- --- பெங்களூரு வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடி வரும் 20ல் துவக்குகிறார்
மதுரை- --- பெங்களூரு வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடி வரும் 20ல் துவக்குகிறார்
மதுரை- --- பெங்களூரு வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடி வரும் 20ல் துவக்குகிறார்
ADDED : ஜூன் 16, 2024 01:19 AM

மதுரை:மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் வழிதடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்களை, ஜூன் 20ல் பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.
புதிய ரயில்கள் தவிர, மேலப்பாளையம் - -திருநெல்வேலி, ஆரல்வாய்மொழி -- நாகர்கோவில், நாகர்கோவில் டவுன் -ஜங்ஷன்- - கன்னியாகுமரி புதியஇரட்டை ரயில் பாதை ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மதுரை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர், வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த புதிய வந்தே பாரத்தில், திருச்சி பயணிகளும் விரைவாக பெங்களூரு செல்ல இயலும். பிரதமர் மோடி துவக்கி வைப்பதால் மதுரைக்கு ஒரே நேரத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் கிடைக்கின்றன.
தெற்கு ரயில்வே பயணியர் சங்க பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது:
மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல ரயில் பயணியர் காத்திருப்பு பட்டியல் 400க்கு மேல் உயர்ந்து வருகிறது.
தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பயணியருக்கு வசதியாக அமையும். மதுரை, பெங்களூருக்கு இடையே வர்த்தக, தொழில் தொடர்பு அதிகரிக்கும்.
நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே இரட்டை வழி ரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.