/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாடிப்பட்டி டூ ஆலம்பட்டி வரை வெளிவட்டச் சாலை; நில எடுப்பு பணிகள் துவங்க திட்டம் வாடிப்பட்டி டூ ஆலம்பட்டி வரை வெளிவட்டச் சாலை; நில எடுப்பு பணிகள் துவங்க திட்டம்
வாடிப்பட்டி டூ ஆலம்பட்டி வரை வெளிவட்டச் சாலை; நில எடுப்பு பணிகள் துவங்க திட்டம்
வாடிப்பட்டி டூ ஆலம்பட்டி வரை வெளிவட்டச் சாலை; நில எடுப்பு பணிகள் துவங்க திட்டம்
வாடிப்பட்டி டூ ஆலம்பட்டி வரை வெளிவட்டச் சாலை; நில எடுப்பு பணிகள் துவங்க திட்டம்
ADDED : ஜூன் 26, 2024 07:08 AM
மதுரை : மதுரை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
நகரின் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க 'ரிங் ரோடு' அமைக்கப்பட்டது. மாட்டுத்தாவணி துவங்கி கப்பலுார் வரை முதற்கட்டமாகவும், திண்டுக்கல் ரோடு பாத்திமா கல்லுாரி முதல் ஆனையூர் வழியாக மாட்டுத்தாவணி வரை 2ம் கட்டமாகவும் பணிகள் நடந்தன. தற்போது வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை 30 கி.மீ., தொலைவுக்கு ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.
இந்த சாலையின் 2ம் கட்ட பணிக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி கிடைக்காததால் பல ஆண்டுகளாக இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தமிழக அரசே இப்பணிகளை தொடரப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்காக நிலஎடுப்பு பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்த வெளிவட்டச்சாலை உட்பட 7 பணிகளுக்கு ரூ.159 கோடியில் நிலஎடுப்பு மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.
எனவே மதுரை வெளிவட்டச் சாலையின் அடுத்த கட்டமாக மேலுார் சிட்டம்பட்டி முதல் சிவகங்கை ரோட்டைக் கடந்து ராமேஸ்வரம் ரோட்டில் மணலுார், அருப்புக்கோட்டை ரோட்டில் வலையன்குளத்தை அடுத்தும், திருநெல்வேலி ரோட்டில் சிவரக்கோட்டை வழியாக தென்காசி ரோட்டில் (எண் 744) ஆலம்பட்டி வரை ரோடு அமைய உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகன காந்தியிடம் கேட்டபோது, 'வெளிவட்டச் சாலைக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும். பின்பு திட்ட அறிக்கை தயாரித்து நிதிஒதுக்கீடு செய்வர். அதன்பின்னரே நில எடுப்பு பணிகள் நடக்கும்'' என்றார்.