ADDED : ஜூன் 26, 2024 07:08 AM
மதுரை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மதுரை மாவட்ட கிரிக்கெட் சார்பில் மதுரையில் சோலைமலை பொறியியல் கல்லுாரி, கே.எல்.என். பொறியியல் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரிகளில் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. போட்டி முடிவுகள்:
முதல் போட்டியில் ரைசிங் சன், மதுரை ஸ்பார்க் அணிகள் மோதின. ரைசிங் சன் அணி 41.3 ஓவர்களில் 249 ரன் எடுத்தது. சரவணன் 84, கார்த்திக் 26 ரன் எடுத்தனர். நந்தகுமார் 3, செந்தில் ஜானேஷ் 4 விக்கெட் வீழ்த்தினர்.
மதுரை ஸ்பார்க் அணி 28.3 ஓவர்களில் 100 ரன்னில் சுருண்டது. விக்கி 35, விஜய்குமார் 21 ரன் எடுத்தனர். நிரேஷ் 5, ஹரீஷ் 3 விக்கெட் வீழ்த்தினர். ரைசிங் சன் அணி 149 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் சச்சின், ஒலிவா அணிகள் மோதின. ஒலிவா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன் எடுத்தது. அமரன் 65, தினேஷ் 45, நரேஷ் 33, பார்த்தசாரதி 31 ரன் எடுத்தனர்.
ேஷக் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய சச்சின் அணி 46.5 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிவராம் 82 (நாட்அவுட்), தமிழ் 50, ேஷக் 46 ரன் எடுத்தனர். மணிமுருகன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
அவென்ஜர், மெஜஸ்டிக் கப்ஸ் அணிகள் மோதியதில் அவென்ஜர் அணி 35.5 ஓவர்களில் 141 ரன் எடுத்தது. சங்கரா 35, சிவானந்தம் 25 ரன் எடுத்தனர். மணி 6 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய மெஜஸ்டிக் கப்ஸ் அணி 43.3 ஓவர்களில் 124 ரன் எடுத்தது. மணி 42 ரன் எடுத்தார்.
தன்வீர் 4, சங்கரா 3 விக்கெட் வீழ்த்தினர். அவென்ஜர் அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மீகா, கிங்ஸ்மேன் அணிகள் மோதியதில் மீகா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 323 ரன் எடுத்தது. சுரேஷ்குமார் 117 (நாட்அவுட்), சந்தோஷ்குமார் 86 (நாட்அவுட்), ரோகித் 46 ரன் எடுத்தனர்.
அடுத்து ஆடிய கிங்ஸ்மென் அணி 43.3 ஓவர்களில் 229 ரன் எடுத்தது. பிரசன்னா 49, ராஜ் 48, தங்கபாண்டி 45 ரன் எடுத்தனர். முருகன் பழனிசாமி 4 விக்கெட் வீழ்த்தினார். மீகா அணி 94 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் ஆடிய டி.வி.எஸ். கிளப் அணி 42 ஓவர்களில் 273 ரன் எடுத்தது. ரிஷி ஆதித்யா 54, கிேஷார் 54 ரன் எடுத்தனர்.
செல்வகுமார் 4 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய விக்டரி அணி 33.4 ஓவர்களில் 146 ரன் எடுத்தது. தினேஷ்குமார் 46, செல்வகுமார் 41 ரன் எடுத்தனர். ஆதித்ய விக்னேஷ் 4, ஆகாஷ் 3 விக்கெட் வீழ்த்தினர். டி.வி.எஸ். கிளப் அணி 127 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய அக்னி அணி 37.1 ஓவர்களில் 186 ரன் எடுத்தது. சக்தி 99 ரன் எடுத்தார். கவுதமன் 3, சந்தோஷ் 3 விக்கெட் வீழ்த்தினர். மஸ்டங் அணி 23.5 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னரசன் 97, சிக்கந்தர் லியஸ் 37 ரன் எடுத்தனர்.
முதலில் ஆடிய கிரசன்ட் அணி 36.2 ஓவர்களில் 90 ரன் எடுத்தது. சரவணன் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய ஸ்பார்க் கோல்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சரவணன் 30 ரன் எடுத்தார். யோகேஷ் 4 விக்கெட் வீழ்த்தினார்.