ADDED : ஜூலை 18, 2024 04:35 AM

சோழவந்தான், : சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது.
பள்ளி முதல்வர் கலைவாணி துவக்கி வைத்தார். 11, 14,17 வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் 15 பள்ளிகள் பங்கேற்றன. 11வயது பிரிவில் காமராஜர் பள்ளி தர்ஷன் முதலிடம், லோகேஸ்வரன் 2ம் இடம், சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மனோ 3ம் இடம் பெற்றனர்.
14 வயதில் முள்ளிப்பள்ளம் பள்ளி வசி ஸ்ரீமன் முதலிடம், புவனேஸ்வரன் 2ம் இடம், ஜெப கின்ஸ்டன் மற்றும் பிரின்ஸ் 3ம் இடம்,17 வயதில் காமராஜர் பள்ளி கவின் முதலிடம், பொற்செல்வன் 2ம் இடம், முள்ளிப்பள்ளம் அரசு பள்ளி தயாளன் 3ம் இடம் பிடித்தனர்.
மாணவிகள் பிரிவு 14 வயதில் மன்னாடிங்கலம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி அனுஸ்ரீ முதலிடம், சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளி வைஷ்ணவி 2ம் இடம், முள்ளிப்பள்ளம் அரசு பள்ளி தமிழ் அழகு 3ம் இடம் பெற்றனர்.
17 வயது பிரிவில் சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளி பாண்டிமீனா முதலிடம், கமலி 2ம் இடம், முள்ளிப்பள்ளம் அரசு பள்ளி நாகஜோதி 3ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளித் தாளாளர் ஜோசப் பென்சாம் பரிசு வழங்கினார். நடுவர்களாக செந்தில் கணேஷ், மாணிக்கம் செயல் பட்டனர்.