/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருநகர் பூங்காவை சீர்படுத்த மனது வைக்குமா மாநகராட்சி விளையாட வழியின்றி ஏமாறும் குழந்தைகள் திருநகர் பூங்காவை சீர்படுத்த மனது வைக்குமா மாநகராட்சி விளையாட வழியின்றி ஏமாறும் குழந்தைகள்
திருநகர் பூங்காவை சீர்படுத்த மனது வைக்குமா மாநகராட்சி விளையாட வழியின்றி ஏமாறும் குழந்தைகள்
திருநகர் பூங்காவை சீர்படுத்த மனது வைக்குமா மாநகராட்சி விளையாட வழியின்றி ஏமாறும் குழந்தைகள்
திருநகர் பூங்காவை சீர்படுத்த மனது வைக்குமா மாநகராட்சி விளையாட வழியின்றி ஏமாறும் குழந்தைகள்
ADDED : ஜூலை 18, 2024 04:31 AM

திருநகர் : திருநகர் அண்ணா பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் குழந்தைகள் விளையாடி மகிழ முடியாமல் தவிக்கின்றனர்.
திருநகரின் மையப் பகுதியில் உள்ள பூங்காவுக்குள் ஹாக்கி, வாலிபால் பால் பாட்மின்டன், கைப்பந்து விளையாட்டு மைதானங்கள் உள்ளன.
தினமும் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பலநுாறு பேர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இதன் அவலம் குறித்து யாரும் கவனிப்பாரின்றி உள்ளது.
பூங்காவின் அவலம்:
சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் பெரும்பாலானவை உடைந்து கிடக்கின்றன. சறுக்குகள் சேதம் அடைந்துள்ளதால் குழந்தைகள் ரத்தக் காயமடைகின்றனர். 'வாக்கிங்' செல்லும் நடைமேடை முழுவதுமாக சேதமடைந்துள்ளதால் குழந்தைகள், முதியோர் சிரமப்படுகின்றனர். பூங்காவில் குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை சரிவர பராமரிக்கப்படாததால், பெண்கள் மனஉளைச்சல் அடைகின்றனர்.
வேறு பொழுதுபோக்கு வசதிகள் இல்லாததால் மக்களால் இந்த பூங்காவை தவிர்க்க முடியவில்லை. காலத்திற்கேற்ற புதிய விளையாட்டு சாதனங்கள் இல்லாததால் குழந்தைகள் இதனை வெறுக்கின்றனர். இரவு நேரங்களில் மது பிரியர்கள் பூங்காவை திறந்த வெளி பாராக பயன்படுத்துகின்றனர். செயற்கை நீரூற்றுகள் செயல் இழந்து விட்டன.
திருநகர் பேரூராட்சியாக இருந்தவரை பூங்கா முறையாக பராமரிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியுடன் இணைந்த பின்பு பூங்கா கண்டுகொள்ளப்படவில்லை. 13 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத திருநகர் பூங்காவை உடனே பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.