ADDED : ஜூலை 27, 2024 06:19 AM
திருமங்கலம் : திருமங்கலம் வாகைக்குளம் கண்மாயில் அனுமதியின்றி சரளை மண் கடத்தப்படுவதாக கிராம நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
வி.ஏ.ஓ., அழகுராஜா மற்றும் சிந்துபட்டி போலீசார் அழகுசிறை - வாகைக்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகள், ஒரு மண் அள்ளும் இயந்திர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது சரளை மண் திருடி கடத்தியது தெரிந்தது. அவ்வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அலெக்ஸ், அதிர்ஷ்ட காமன், கணேசன், ஜெயக்காமன் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.