/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குப்பை கொட்டத் தெரியாமல் தவிக்கும் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டத் தெரியாமல் தவிக்கும் ஊராட்சி நிர்வாகம்
குப்பை கொட்டத் தெரியாமல் தவிக்கும் ஊராட்சி நிர்வாகம்
குப்பை கொட்டத் தெரியாமல் தவிக்கும் ஊராட்சி நிர்வாகம்
குப்பை கொட்டத் தெரியாமல் தவிக்கும் ஊராட்சி நிர்வாகம்
ADDED : ஜூன் 10, 2024 05:18 AM

நாகமலைப்புதுக்கோட்டை : திருப்பரங்குன்றம் ஒன்றியம் நாகமலைப்புதுக்கோட்டை அருகே கரடிப்பட்டி ஊராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது.
இந்த ஊராட்சியில் பாரதியார் நகர், பொதிகை நகர், ராஜம்பாடி பகுதிகளில் வழியெங்கும் குப்பை, குவியல் உள்ளது. ஊராட்சி அலுவலகமே குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நெற்களத்தில் துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கும் குப்பை கொட்டப்படுகிறது.
மழையால் அலுவலக வளாகத்தில் முழங்கால் அளவிற்கு பல நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் உள்ளதாலும், வடிகால் வசதியின்மையாலும் நீர் வடிய வழியில்லாமல் குப்பையுடன் சேர்ந்து கழிவுநீராக மாறியுள்ளது. இதனால் ஊராட்சி அலுவலகம் வருவோர் முகம் சுளிக்கும் வகையில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தி பெருகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
ஊராட்சித் தலைவி பாலாமணி கூறியதாவது:வீடுகளில் தொடர்ந்து குப்பை சேகரிக்கிறோம். நான்குவழிச் சாலையோரம் பிறபகுதியில் இருந்து வந்து இரவில் குப்பை கொட்டிச் செல்கின்றனர். அவற்றை அப்புறப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. சேகரிக்கும் குப்பையை கொட்டுவதற்கு ஓந்திமலை பல்லோட்டி பள்ளி அருகே உள்ள ஊராட்சி நிலத்தில் குப்பையை கொட்ட விடாமல் அப்பகுதியினர் தடுக்கின்றனர்.
அவர்களிடம் போலீசார், பி.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. கரடிப்பட்டி கண்மாயிலும் கொட்ட முடியாது. அதிகாரிகளும் இதற்கான தீர்வு குறித்து ஆலோசிப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் குப்பையை எங்கே கொட்டுவதென்று தெரியாமல் அலுவலக வளாகத்திலேயே கொட்டுகிறோம் என வேதனை தெரிவித்தார்.