ADDED : ஜூன் 10, 2024 05:09 AM
மேலுார் : கிடாரிபட்டி லதாமாதவன் கல்லுாரி, யமஹா நிறுவனம் சார்பில்டூவீலர் பழுது நீக்கும் பயிற்சி துவக்க விழா நடந்தது.
சேர்மன் மாதவன், யமஹா கல்வி பிரிவு உதவி பொது மேலாளர் நவீன் பாஸ்கர் தலைமை வகித்தனர். திறன் மேம்பாட்டு பயிற்சி இயக்குநர் பால் நிக்ஸன், கல்லுாரி செயல் அலுவலர்கள் முத்துமணி, காந்திநாதன், மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தனர். பொறியியல், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் வரத விஜயன், முருகன் கலந்து கொண்டனர். செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.