ADDED : ஜூன் 16, 2024 05:11 AM
மதுரை: மதுரை தனக்கன்குளத்தில் திருவாசகம் திருவருட்பா பாராயணம் நடந்தது.
ஓய்வுபெற்ற மின் பொறியாளர் ராஜாராம் தலைமை வகித்தார். திருவாவடுதுறை ஆதினபாராயண மாதர் குழுவின் பிரார்த்தனை நடந்தது. இந்திராணி விளக்கு ஏற்றினார். அமைப்பாளர் வேங்கடராமன், வள்ளலார் மன்ற நிர்வாகி சுப்புராஜ், சன்மார்க்க சேவகர் ராமநாதன் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.