ADDED : ஜூன் 26, 2024 07:08 AM
உசிலம்பட்டி: மதுரையில் இருந்து தேனி பகுதிக்கு செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன.
நேற்று மாலை உசிலம்பட்டியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் சவுந்தரபாண்டி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சோதனை நடத்தினர். குறிப்பிட்ட வேகத்தில் கவனமாக விபத்து நேரிடாமல் பஸ்களை இயக்க அறிவுறுத்தினர். அதிவேகமாக இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.