தாமரைப்பட்டி ரோட்டை கடக்கும் பறவைகள்
தாமரைப்பட்டி ரோட்டை கடக்கும் பறவைகள்
தாமரைப்பட்டி ரோட்டை கடக்கும் பறவைகள்
ADDED : ஜூன் 10, 2025 01:37 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி--தாமரைப்பட்டி இடையே நான்கு வழிச்சாலையாக அமைகிறது அவுட்டர் ரிங் ரோடு. இது வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி, பூச்சம்பட்டி இடையே வகுத்து மலை, வண்ணாத்தி கரடு நடுவே செல்கிறது.
இப்பகுதியில் வனவிலங்குகள் வாகனங்களின் இடையூறின்றி மலைகளுக்கு இடையே கடந்து செல்ல தமிழகத்தின் முதல் 'அனிமல் பாஸ் ஓவர்' தமிழக வனத்துறை 2022ல் அனுமதி வழங்கி 90 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துஉள்ளது.
இந்நிலையில் இப்பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அடுத்தடுத்து செயல்படும் கல் குவாரிகளில் பயன்படுத்தும் வெடி மற்றும் கிரஷர் சத்தங்களால் வன விலங்குகள் வருவது குறைந்துவிட்டன. இந்த ரோட்டை கடந்து மா, தென்னந்தோப்பிற்குள் இரை தேடிச் சென்று வரும் மயில்கள் வாகனங்களில் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளதுஎன இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொண்டையம்பட்டி ஸ்ரீகாந்த்: சிறு கனிம சலுகை விதிகளை மீறி பல்வேறு குளறுபடிகளில் கல்குவாரிகள் வனப்பகுதி, நீர்நிலைகள் அருகே செயல்படுகிறது. வனத்துறையினர் பயிரிட்ட மரங்களை சாய்த்துள்ளனர். நான் 15 ஆண்டுகளுக்கு முன் பார்த்த நரி, மான், கேளை ஆடுகள் மாயமாகின, இப்பகுதிக்கு வருவதில்லை. காட்டு எருமை, பன்றிகளும் மலை இறங்குவதில்லை. வண்னாத்தி கரட்டை வனப்பகுதியுடன் இணைக்க வேண்டும்.
வாடிப்பட்டி கவுரிநாதன்: இப்பகுதியில் வசித்த மயில்கள், பல்லுயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வால்பாறையில் புலிக்குட்டி வேட்டையாட ரூ.75 லட்சம் ஒதுக்கிய வனத்துறை பயிற்சி அளித்தும் பயனில்லை என்றார்.