Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ராமகிருஷ்ண மடத்தில் சகோதரத்துவ தினம்

ராமகிருஷ்ண மடத்தில் சகோதரத்துவ தினம்

ராமகிருஷ்ண மடத்தில் சகோதரத்துவ தினம்

ராமகிருஷ்ண மடத்தில் சகோதரத்துவ தினம்

ADDED : செப் 13, 2025 04:27 AM


Google News
மதுரை: சுவாமி விவேகானந்தர் 1893 செப்.11ல் அமெரிக்கா வின் சிகாகோவில் சர்வமத மாநாட்டில் பேசினார். இந்நாளையொட்டி மதுரை ராமகிருஷ்ண மடத்தில் உலக சகோதரத்துவ தினமாக கொண்டாடப் பட்டது. 5 கல்வி நிறுவனங்களுக்கு பேச்சு போட்டி நடந்தது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

மடத்தின் தலைவர் சுவாமி நித்தியதீபானந்த மகராஜ் பேசுகையில், 'விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவின் மூலம் நமது நாட்டு மக்கள் இழந்திருந்த தன்னம் பிக்கையை மீட்டு கொடுத்தார். ஹிந்து மதம் மற்றும் பாரதிய கலாசாரத்தின் பண்புகளை உலகிற்கு உரக்க எடுத்துரைத்தார்.

அனைத்து மதங்களின் தாய் மதம் ஹிந்து மதம். பிற சமய கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை வெறுப்பின்றி ஏற்றுக்கொள்ளுதல் ஹந்து மதத்திற்கே உரிய சிறப்பு பண்பு என விவே கானந்தர் குறிப்பிட்டார்' என்றார்.

சுவாமி அர்கபிரபானந்தர், தயாசாகரானந்தர், கோவை மடத்தை சார்ந்த சுவாமி பக்திவிரானந்த மகராஜ் ஆகியோர் பேசினர்.

வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு நுால் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us