ADDED : செப் 26, 2025 03:45 AM
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அல்லிகுண்டம் சின்னமூக்கனுக்கு சொந்தமான நிலத்தில் சென்னையைச் சேர்ந்த ஜி.டி.ஐ., நிறுவனம் 2009 ல் ஏர்செல் நிறுவனத்திற்காக டவர் அமைத்தனர்.
இதற்காக நில வாடகை சின்னமூக்கன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 2017 ல் ஏர்செல் சேவையை நிறுத்தியது. இதையடுத்து அந்த டவர் செயல்படாமல் இருந்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது செல்போன் டவர், டீசல் ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் அதற்கு உண்டான மின்சாதன பொருட்கள் (ரூ.27 லட்சம் மதிப்பிலான) ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து சேடபட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.