ADDED : செப் 24, 2025 06:27 AM

மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் (டான்சாக்) சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் வீரபாண்டி தலைமை வகித்தார்.
செயலாளர் கண்ணன் கோரிக்கை குறித்து விளக்கினார். அரசு கல்லுாரியில் வழங்குவது போல, உதவிபெறும் கல்லுாரி அலுவலர்களுக்கும் பதவி உயர்வு, ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். உதவிபெறும் கல்லுாரி நுாலகர்களுக்கும் பணிமேம்பாடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிர்வாகிகள் ஷெரீப், ராபர்த்திலீபன், பிரபாகரன், மனோகரன், ரமேஷ், அரசு ஊழியர்கள் சங்க பொருளாளர் கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் குமரன் நன்றி கூறினார்.