ADDED : செப் 25, 2025 03:50 AM
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் அடியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர் பாண்டி தலைமை வகித்தார். தி.மு.க., கிருஷ்ணபாண்டி, ஆறுமுகம், கவுன்சிலர் சுவிதா, காங்., சார்பில் நாகேஸ்வரன், ம.தி.மு.க., முருகேசன், இ.கம்யூ., மகாமுனி, திருமண மண்ட உரிமையாளர்கள் சங்கம் நாகராஜன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி முருகன், ஆறுமுகம், வி.சி.க., முத்து மணிகண்டன், ம.நீ.ம., சுருளி ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.