ADDED : செப் 25, 2025 03:50 AM
மதுரை : திருமங்கலம் அருகே புலியூரைச் சேர்ந்தவர் நந்தினி 24. எம்.ஏ., பி.எட்., முடித்துள்ள இவர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு துணை முதல்வர் உதயநிதியிடம் மனு கொடுத்தார்.
அவர் கூறியதாவது: நான் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். தடகள விளையாட்டு வீராங்கனையாகவும் உள்ளேன். ஓட்டம், நீளம்தாண்டுதலில் தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளேன். வாலிபால், கிரிக்கெட்டிலும் மாநில அளவில் போட்டியிட்டுள்ளேன். விளையாட்டு வீராங்கனைகளுக்கான இடஒதுக்கீடு வாயிலாக எனக்கு வேலைவாய்ப்பு கேட்டு துணை முதல்வரிடம் மனு கொடுத்தேன். பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.