/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பணம் கொடுத்து வாங்கியும் பயனின்றி வீணாகும் குடிநீர் பணம் கொடுத்து வாங்கியும் பயனின்றி வீணாகும் குடிநீர்
பணம் கொடுத்து வாங்கியும் பயனின்றி வீணாகும் குடிநீர்
பணம் கொடுத்து வாங்கியும் பயனின்றி வீணாகும் குடிநீர்
பணம் கொடுத்து வாங்கியும் பயனின்றி வீணாகும் குடிநீர்
ADDED : ஜூன் 21, 2025 03:39 AM

மேலுார்: மேலுாரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், இத்தண்ணீரை குடிநீராக பயன்படுத்துவோரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
திருச்சி, குளித்தலையில் இருந்து ஆழ்குழாய் அமைத்து, மேலுார் தாலுகாவுக்கு காவிரி குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தண்ணீரை, காந்திஜி பூங்காவில் நீரேற்று நிலையம் அமைத்து தாலுகா முழுவதும் விநியோகிக்கின்றனர்.
இதில் மேலுார் நுழைவாயிலில் உள்ள பழுது நீக்கும் தொட்டியினுள் சமீபத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் ரோட்டில் வீணாக செல்கிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: குடிநீர் திட்ட தொட்டியை அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. இதனால் தொட்டியினுள் விஷச் செடிகள் வளர்ந்து தொட்டி தெரியாத அளவுக்கு புதர் மண்டிக் கிடக்கிறது.
அதனுள் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால், தண்ணீர் மாசுபட்டதாக, சுகாதாரமற்ற நிலையில் சப்ளையாகிறது. இத் தண்ணீரை பயன்படுத்துவோர் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.
குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து நகராட்சி நிர்வாகம் ஒரு லிட்டர் குடிநீரை ரூ.16 க்கு வாங்குகிறது.
அந்தத் தண்ணீர் ரோட்டில் ஓடுவதால் மக்களின் வரி பணம்தான் வீணாகிறது. இது அதிகாரிகளின் பொறுப்பாற்று தன்மையை காட்டுகிறது. அதிகாரிகள் குடிநீர்திட்ட தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.