மதுரை: மதுரை யாதவர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் 'இலங்கையில் தமிழ் இலக்கிய மரபு' எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் ராஜூ, தலைவர் ஜெயராமன்தலைமை வகித்தனர்.
தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் ராணி சீதரன் பேசியதாவது: இலங்கையில்உருத்திரமூர்த்தி, பாரதியார் மீது மிகுந்த பற்றுக் கொண்டதால், அவரை 'மகாகவி' என அழைக்கின்றனர். இலங்கையில் தெருக்கள், பாடசாலை, விளையாட்டு மைதானத்தின் பெயர்கள் பாரதியாரின் பெயரில் அமைந்துள்ளன.
பள்ளிக் கல்லுாரி பாடத்திட்டங்களில் பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறு உரைநடை பாடமாக உள்ளது என்றார்.
நிகழ்வில் கல்லுாரி செயலாளர் கண்ணன்,பார்க் பிளாசா குழும தலைவர் கே.பி.எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.