/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரி வேண்டுகோள் விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்
விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்
விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்
விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்
ADDED : ஜூன் 20, 2025 03:25 AM
மதுரை:'மதுரை மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த முன்வர வேண்டும்' என, மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: பகலில் இலவசமாக கிடைக்கும் இயற்கை வளமான சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் சூரியஒளி மின்சாரத்தை விவசாயிகள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதுடன், மற்ற வளங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும்போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைக்கலாம்.
நமது நாட்டை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் முன்னேற்ற, பகலில் அதிகளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த முடிந்தவரை மின்மோட்டார்களை பகலில் உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.