ADDED : ஜூன் 20, 2025 03:24 AM

சோழவந்தான்:சோழவந்தான் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் மீன்பிடித் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல் கம்ப காமாட்சி அம்மன், பதினெட்டாம்படி கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து, பெரிய கோடாங்கி பொன்ராமின் அருள் வாக்கையடுத்து வெடிச் சத்தத்துடன் விழா தொடங்கியது.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாதி, மத வேறுபாடு இன்றி கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனர். கண்மாய் பாசனத் தலைவர் ராமன் தலைமையில் 8 ஊர் மக்கள் முன்னிலையில் நடந்தது