ADDED : ஜூன் 24, 2025 03:34 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின்மதுரை மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது.
நிறுவனர் ஈசன்முருகசாமி, மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், அமைப்புசெயலாளர் நேதாஜி, துணைத் தலைவர் உதயகுமார், மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், காராமணி, அலெக்ஸ், தேனி மாவட்ட நிர்வாகிகள் முருகன், வேல்முருகன், சின்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜூலை 5ல் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த 63 பேர்களை நினைவு கூரும் வகையில் உசிலம்பட்டியில் வீரவணக்க ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்தனர்.