ADDED : ஜூன் 24, 2025 03:34 AM
மதுரை: மதுரை வாசகர் வட்ட நுால் மதிப்புரைக் கூட்டம் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
அமைப்பாளர் சண்முகவேலு தலைமை வகித்தார். ஆசிரியர் சிவசத்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் ஷேக்நபி, ஆசிரியர்கள் அழகுராஜ், பாவலர் பாரதி பேசினர்.
வங்கியாளர் பிரியதர்ஷினி, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நுாறு நாற்காலிகள், அறம், யானை டாக்டர், சோற்றுக் கணக்கு, வணங்கான் போன்ற 5 நுால்களில் காணப்படும் வாழ்வின் அதிசய மனிதர்களைப் பற்றிய கருத்துகளை எடுத்துக் கூறினார்.
வாசகர்கள் ஜெயசீலன், ராமசாமி, ராஜாமுகம்மது ஏற்பாடுகளை செய்துஇருந்தனர்.