/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை நீளத்தை அதிகரியுங்க ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை நீளத்தை அதிகரியுங்க ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை நீளத்தை அதிகரியுங்க ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை நீளத்தை அதிகரியுங்க ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை நீளத்தை அதிகரியுங்க ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2025 03:44 AM

மதுரை: திருப்பரங்குன்றம் ஸ்டேஷனில் நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என மதுரையில் நடந்த ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் நடந்த கோட்ட அளவிலான இக்கூட்டத்தில் மூத்த கோட்ட வணிக மேலாளர் கணேஷ் வரவேற்றார்.
கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா பேசியதாவது: திருமங்கலம், கள்ளிக்குடி, வாஞ்சி மணியாச்சி, ராமேஸ்வரம் ஸ்டேஷன்களில் கூடுதல் பிளாட்பாரம், சோழவந்தான் ஸ்டேஷனில் கூடுதல் நிழற்கூடைகள் அமைக்கப்பட்டுள்ளன. துாத்துக்குடி ஸ்டேஷனில் 2 லிப்ட்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் 17 ஸ்டேஷன்கள் ரூ.166.26 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன. காரைக்குடி, சோழவந்தான், மணப்பாறை, ஸ்ரீவில்லிப்புத்துார் ஸ்டேஷன்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.
ரூ. 92.80 கோடியில் திருநெல்வேலி ஸ்டேஷனில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
குழு உறுப்பினர் சிவசுந்தரம் பேசியதாவது: அம்ரூத் திட்டத்தின் கீழான மதுரை ரயில்வே ஸ்டேஷன் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கூடுதல் லிப்ட் அமைக்க வேண்டும். அங்குள்ள பார்க்கிங்கை முறைபடுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் ஸ்டேஷனின் முதல் பிளாட்பாரத்தின் நீளத்தை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதற்கு ஏற்ப அதிகரித்து, போதுமான நிழற்கூரைகள் அமைக்க வேண்டும். பள்ளி செல்பவர்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடப்பதை தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றார்.
தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் பேசுகையில், ''கொங்கன் ரயில்வேயில் செயல்படுத்தப்படும், ரயில்களில் சரக்கு லாரிகளை ஏற்றிச் செல்லும் 'ரோ-ரோ' சேவையை மதுரைக்கோட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். மதுரை வழியாக ராமேஸ்வரம் - கோவை இரவு நேர ரயில் இயக்க வேண்டும்,'' என்றார்.
வணிக மேலாளர் மோகனப்பிரியா நன்றி கூறினார். கூடுதல் மேலாளர் ராவ், கிளை அதிகாரிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.