ADDED : செப் 04, 2025 05:07 AM
பேரையூர்: பேரையூர் அருகே பழையூர் பிச்சை 60. இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்கள் டி.குன்னத்துாரில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டு வந்தனர்.
மர்ம நபர்கள் வீட்டின் மாடி கதவு , பீரோவை உடைத்து 3.5 பவுன் நகை மற்றும் ரூ. பத்தாயிரத்தை திருடி சென்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.