ADDED : செப் 04, 2025 05:07 AM
அலங்காநல்லுார்: அச்சம்பட்டி பகுதி விவசாயி சுப்பிரமணி 55. இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று மாலை பெருமாள் கோயில் அருகே மேய்ந்த பசு மாடுகளுக்கு காளை மாடு ஒன்று இடையூறு செய்துள்ளது.
அதை விரட்ட சென்ற சுப்ரமணியை காளை முட்டி துாக்கி வீசியது.இதில் கீழேவிழுந்து பின் தலையில் காயமடைந்தவர் அலங்காநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இறந்தார்.