ADDED : ஜன 28, 2024 06:07 AM

பாலமேடு : பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் 64ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. மடத்தில் கும்ப கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மேளதாளத்துடன் மாலை விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஓசை மடத்தில் மகாலிங்க சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் சிறப்பு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.