ADDED : ஜூன் 20, 2025 12:27 AM
மதுரை: மதுரை சொக்கிக்குளம் உழவர் சந்தையில் வேளாண் வணிகம், வேளாண் வணிகத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
டேங்கர் பவுண்டேஷன் ஆதரவுடன் நடந்த முகாமிற்கு வேளாண் துணை இயக்குனர் மெர்சி ஜெயராணி தலைமை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி முன்னிலை வகித்தார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் பரமேஸ்வரன், ரமீலா, கதிரேசன், பணியாளர்கள் திராவிடமாரி, பாக்கியநாதன், காதர் மொகைதீன் பங்கேற்றனர்.