Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எஸ்.ஐ., வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு

எஸ்.ஐ., வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு

எஸ்.ஐ., வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு

எஸ்.ஐ., வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு

ADDED : ஜூன் 20, 2025 12:27 AM


Google News
மதுரை: மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களின் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இவ்வகுப்புகளில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர். மேலும் இவ்வகுப்புகள் வாயிலாக போட்டித் தேர்வுகளில் பயிற்சி பெற்றோருக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

தற்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு மூலம் அறிவித்துள்ள எஸ்.ஐ.,கள், தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி., தொகுதி 4, வி.ஏ.ஓ.,க்களுக்கான முழுமாதிரித் தேர்வுகள் ஜூன் 24, ஜூலை 2 மற்றும் ஜூலை 9 ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்க உள்ளன. இதுதொடர்பான விவரங்களுக்கு 86989 36868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குனர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us