ADDED : அக் 06, 2025 04:07 AM
பேரையூர் : சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் மருத்துவ முகாம் நடந்தது.
கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் நலப்பெட்டகங்களை தேனி எம்.பி., தங்கத் தமிழ்ச்செல்வன் வழங்கினார். வட்டார தலைமை மருத்துவர் விஸ்வநாதபிரபு தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உசிலம்பட்டி எம்.எல்.ஏ அயயப்பன், தலைமை ஆசிரியர் செந்தில்வேல் பங்கேற்றனர்.


