ADDED : செப் 26, 2025 03:51 AM
மதுரை:மதுரை காந்தி மியூசியம் சார்பில் காந்திகிராம பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதன் முன்னிலையில் பதிவாளர் சுந்தரமணி, மியூசிய செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார், ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், பேராசிரியர்கள் மீனாட்சி, மணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மாணவர்களுக்கு காந்திய சிந்தனை, அகிம்சை குறித்து பயிற்சி வழங்குவது, காந்திய புகைப்பட கண்காட்சி நடத்துவது குறித்து விளக்கப்பட்டது. கல்வி அலுவலர் நடராஜன், ஓய்வு பேராசிரியர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.