ADDED : செப் 26, 2025 03:52 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தினம் ஒரு பகுதியில் நடக்கிறது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
நேற்றைய கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில்கள் பாதிக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. தி.மு.க., ஆட்சியின் அவலங்களை நிர்வாகிகள் வீடு வீடாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.