சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி அதிகாரிகள் கடைகளில் போதை பொருள்கள், பாலிதீன் பைகள் விற்பனை குறித்து சோதனை நடத்தினர். செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் ஆய்வு நடந்தது.
இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம், கண்ணம்மாள், செல்லப்பாண்டி, வரித்தண்டலர்கள் கண்ணதாசன், செல்வமணி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் ராமு, பதிவறை எழுத்தர் சோனை உள்பட பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.