/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு
வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு
வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு
வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 14, 2025 05:23 AM
மதுரை: மதுரை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் அழகுசேர்வை கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை கிழக்கு தாலுகா கருப்பாயூரணியில் காளிகாப்பானில் பெரியாறு - வைகை பாசன வாய்க்கால் 23வது மடை உள்ளது. காளிகாப்பான், சக்கிமங்கலம், ஆண்டார்கொட்டாரம் பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் இப்பகுதியில் பாசன வசதி பெறுகிறது.
இதற்கான வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் குடிநீர், பாசன வசதிக்கு வழியின்றி தடைபட்டுள்ளது. வாய்க்காலில் எம் சாண்ட், ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல இயலாத நிலை உள்ளது. மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கருப்பாயூரணி முன்னோடி விவசாயி தர்மராஜ் கூறுகையில், ''விவசாய நிலத்தில் கட்டுமானங்கள் உருவாகி வாய்க்காலில் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் செல்ல வழிஏற்படுத்த வேண்டும்'' என்றார்.